கட்டடம்

இந்திய மரபுடைமை நிலையத்தின் தொலைநோக்குக்கு இணங்க அதன் நான்கு மாடிக் கட்டடம் தனித்தன்மை வாய்ந்த, தாக்குப்பிடிக்கக்கூடிய ஒரு சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்தியக் கட்டடக் கலையையும் நவீன கட்டடக்கலை கூறுகளும் இங்கே சங்கமிக்கின்றன.

கட்டடத்தின் முகப்பு பெளலி (இந்தியக் குளத்துக்கரை படிகள்) எனப்படும் அம்சத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கலாச்சாரத்தைக் கொண்டாடவும் பாராட்டவும் ஒரு நகர்ப்புற மன்றத்தை அது ஏற்படுத்தித் தருகிறது.

இந்தியக் கலாச்சாரத்தின் வேற்றுமையும் பன்முகத் தன்மையும் கட்டடத்தின் வடிவமைப்பில் வெளிப்படுகிறது. அந்த நிலையம் பகலில் ஜொலிக்கும் அணிகலனாகவும் இரவில் ஒளிரும் ஒளிக்கூண்டாகவும் காட்சியளிக்கிறது.

கட்டடம்