புகைப்படம், காணொலி

த​னியார், லாப நோக்கற்ற காரணங்களுக்காக புகைப்படங்கள் எடுப்பது அனுமதிக்கப்படும். ஒளி, கேமரா முக்கால் நிலைச்​சட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி இல்லை. இந்திய மரபுடைமை நிலையத்தின் அனுமதியுடன் மட்டுமே காணொலி எடுக்க முடியும்.

செய்தி​ புகைப்படக்காரர்கள், காணொ​லி எடுப்போர், ஒளிபரப்புத் துறையின் தயாரிப்பாளர்கள், ச​மூக ஊடக வலைப்பூ பதிவாளர்கள் போன்றோர் தங்கள் விவரங்களை NHB_IHC@nhb.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, இரண்டு வாரத்திற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும்.