நன்கொடைகள் நமது மரபுடைமையைக் காத்திடுங்கள்

சமூகங்களைப் பிணைப்பது மரபுடைமை. இந்திய மரபுடைமை நிலையத்தில், இதைத்தான் நாங்கள் செய்ய முற்பட்டிருக்கிறோம். நமது இந்தியக் கலாசாரம் பற்றிய புரிந்துணர்வை வளர்க்கவும், வருகையாளர்களுக்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் அளிக்கவும், நமது அடையாள உணர்வை வலுப்படுத்தவும் புதுமையான வழிமுறைகளை நாங்கள் தொடர்ந்து தேடி வருகிறோம்.

எங்கள் பணிக்கு நன்கொடை வழங்குவதன்மூலம், வருகையாளர் அனுபவத்திற்கு நீங்களும் பங்களித்து, சமூக உணர்வை வளர்க்கவும், கலாசாரத்தையும் வரலாற்றையும் பாதுகாக்கவும் துணை புரியலாம்.

நீங்கள் அளிக்கும் நன்கொடை இவற்றுக்குப் பயன்படும்:

  • சிங்கப்பூரிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் வாழ்ந்துவரும் இந்திய, தெற்காசிய சமூகங்களைப் பற்றிய விரிவான, அனைத்தையும் உள்ளடக்கிய திரட்டை உருவாக்குவதற்கு;
  • எங்களது காட்சிக்கூடங்கள், கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் புதுப்பிப்பதற்கு;
  • பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்து, அனைவரையும் எளிதில் சென்றடைய, , சமூக உறவை வளர்ப்பதற்கு;
  • சிங்கப்பூரிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் உள்ள இந்திய, தெற்காசிய சமூகங்களின் பரந்த வரலாற்றைப் பற்றிய புதிய கண்ணோட்டங்களைக் கண்டறிவதற்கான கல்வி ஆய்வுகளுக்கு ஆதரவளிப்பதற்கு

நமது இந்திய மரபுடைமையின் இணைக் காப்பாளர்களாகி ஆதரவு வழங்குங்கள். எங்களது நன்கொடை இயக்கத்தைப் பற்றி உங்கள் நண்பர்களிடமும் குடும்பத்தாரிடமும் சொல்லுங்கள். கடந்தகாலத்திற்கு உயிரூட்ட முற்படும் எங்களது மரபுடைமைப் பணியின் அடுத்த கட்டத்திற்கு ஆற்றலளிக்க உதவுங்கள்!

நீங்கள் பின்வரும் வழிகளில் பங்களிக்கலாம்:

இணையம்வழி நன்கொடை

பதிவு செய்யப்பட்ட அறப்பணி அமைப்பான எங்கள் நிலையத்திற்கு, national giving platform தளத்தின் வாயிலாகப் பாதுகாப்பான முறையில் இணையம்வழி நீங்கள் நன்கொடை வழங்கலாம். உங்கள் பங்களிப்புக்கு நன்றி!

கலைப் பொருட்களை இரவலாகவும் நன்கொடையாகவும் வழங்கலாம்

உங்களிடமுள்ள கலைப்பொருட்களை நாங்கள் வரவேற்கிறோம். எங்களின் திரட்டுக்கு நீங்கள் பங்களிக்க விரும்பினால், இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். அரும்பொருளகக் குழுவினர் தொடர் பரிசீலனைக்காக உங்களுடன் தொடர்பு கொள்வார்கள்.